Whatsapp Tips and Tricks In Tamil
Whatsapp Tips and Tricks In Tamil புதிய அப்டேட்டுடன் வாட்ஸ்அப்
காலைல எழுந்து குட்மார்னிங் அனுப்பறதுல ஆரம்பிச்சு... நாள் முழுக்க சாட் செய்யும் வாட்ஸ்அப்ல, நமக்கு தெரியாத ஆச்சர்யமூட்டும் ட்ரிக்ஸ்கள் நிறைய உள்ளன. வெறும் போட்டோ, வீடியோ, டெக்ஸ்ட் அனுப்பிட்டு இருக்குற நமக்கு இதுல உள்ள வேறு சில ட்ரிக்ஸ் இதோ...
1. போட்டோவில் எழுதலாம்:புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.
2. ஸ்டைலிஷ் எழுத்துக்கள்:
நீங்கள் ஒரு செய்தியை அனுப்புகிறீர்கள் அதில் முக்கியமான விஷயத்தை போல்டாக காட்ட வேண்டும். சில எழுத்துக்களை சாய்வு எழுத்துக்களாக காட்ட வேண்டும். அல்லது உங்கள் நண்பர் அனுப்பிய ஒரு செய்தியில் சில விஷயங்களை அடித்து காட்ட வேண்டும் என விரும்பினால் அதனையும் வாட்ஸ் அப்பில் செய்ய முடியும்.
வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும், _ குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.
உதாரணம்:
*வாட்ஸ்அப்*
_வாட்ஸ்அப்_
~ வாட்ஸ்அப்~
உங்கள் போன் குறைவான மெமரி கொண்ட போனாக இருக்கலாம். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளால் நிரம்பி வழியும் கேலரிகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் யார் உங்களது மெமரி கில்லர் என்பதை எளிமையாக கண்டறியலாம். ஆனால் தற்போது இந்த வசதி ஐபோன்களில் மட்டுமே உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் வர இருக்கிதாம். Settings > Account > Storage Usage இதில் சென்று பார்த்தால் யார் உங்கள் வாட்ஸ்அப் மெமரியை அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
இன்றைய யூத்களிடம் இருக்கும் பெரிய பிரச்னையே இது தான்ப்ளூ. டிக் வந்துருக்கு, மெஸேஜ் படிச்சிருக்க ஆனா ரிப்ளே பண்ன மாட்டேங்குற! இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆப்ஷன் தான் இது. Account > Privacy-யில் சென்று ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது.
வாட்ஸ்அப் க்ரூப்ல ஒரு நாளைக்கு 1000 கான்வெர்சேஷன்லாம் பண்ணுற க்ரூப் இருக்கு. இதுல ஏதோ ஒரு முக்கியமான இடத்துல நீங்க ஒருத்தர் பேர சொல்லி பேசி இருப்பீங்க அது அவருக்கு தெரியாம போக வாய்ப்பிருக்கு. ஆனா இனி அந்த பிரச்னை இல்லை. க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.
நேத்து நைட்டு 2 மணி வரைக்கும் ஏன் தூங்காம இருந்த? வாட்ஸ் அப்ல அப்ளோ நேரம் என்ன வேலனு ஸ்ட்ரிக்ட் ஆபீஸரா வர்ற கேள்விகளும், சில நேரத்துல ஆபீஸ்ல மேனேஜர் 10 மணி லாஸ்ட் சீன் காட்டுது ஆனா நா அனுப்புன மெஸேஜுக்கு ரிப்ளே இல்லனு கேட்குற தவிர்க்க ஈஸியான வழி Account > Privacy > Last Seen Time stamp ல ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது.
This Post Written by and Published by Anandha Vikatan
Labels:
Social SEO in Tamil
Thank you for discussing this very useful article. I heard something new from you. Keep blogging. SEO Dubai
பதிலளிநீக்கு