நீங்கள் பெறுவதை காட்டிலும் இழப்பது அதிகம் டிரம்ப்பிற்கு கூகிள் சுந்தர் பிட்சை எச்சரிக்கை

சுந்தர் பிச்சை, டொனால்டு ட்ரம்ப்
Donald Trump and Sundhar Pitchai 

அமெரிக்க 
அதிபராகப் பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாகப் பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் நலன்களைக் கருதி ஈராக் சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு இனி விசா கிடையாது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. அந்நாடுகளிலிருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிநாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதும் டெக் சிஇஓக்கள் அதிர்ச்சியில் ஸ்டேட்டஸ் தட்டியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது அதிருப்தியை ஸ்டேட்டஸ் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாகக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது அறிவிப்பில் '' அல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளிலிருந்து இந்தச் செய்தியை வெளியிடுகிறோம். அதிபர் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பின் படி பாதிக்கப்படும் கூகுள் பணியாளர்கள் உலகின் எந்த நாடுகளில் இருந்தாலும் உடனடியாக அமெரிக்க திரும்புங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ட்ரம்பின் இந்த அறிவிப்பு 100க்கும் மேற்பட்ட டெக் நிறுவனங்களைப் பாதிக்கும். குறிப்பாக எங்கள் நிறுவன பணியாளர்களை இந்தப் புதிய சட்டம் பாதிப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து புலம்பெயர்தலில் உள்ள கொள்கைகளைக் கடைபிடித்து வருகிறோம்.

ட்ரம்ப்

சிரியா, ஈராக், ஈரான், சூடான், சோமாலியா, ஏமன் மற்றும் லிபியா ஆகிய ஏழு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நாடுகளில் உள்ள க்ரீன்கார்டு மற்ரும் விசா வைத்திருப்போரையும் கூட விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லையென அமெரிக்க பத்திரிக்கை தகவல்கள் கூறுகின்றன.

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்தப் புதிய அறிவிப்பில் உள்ள சிக்கல்களைக் கலைய முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இந்தப் புதிய சட்டம் தொடர்ந்தால் அமெரிக்கா நிறைய‌ திறமைசாலிகளை இழக்க நேரிடும்.என்று கூகுளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூகுளின் ஒரு அதிகாரி இந்த அறிவிப்பின் காரணமாக நியூஸிலாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்புகிறார் என்றும் கூகுள் கூறியுள்ளது.

இந்த ஏழு நாடுகளில் உள்ள க்ரீன் கார்டு வைத்திருப்போர் உடனடியாக நாடு திரும்புங்கள். H-1B விசா வைத்திருப்பவர்களால் திரும்ப முடியாது. இது ஒரு இக்கட்டான சூழல் இதனைச் சமாளித்தாக வேண்டிய சூழலில் கூகுள் உள்ளது. இதே நிலையில் தான் அனைத்து டெக் நிறுவனங்களும் உள்ளது. மைக்ரோசாஃப்ட்டும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

முதலில் மார்க், தற்போது சுந்தர்பிச்சை எனச் சிலிக்கான் வேலியின் மொத்த எதிர்ப்பலைகளும் ட்ரம்ப் பக்கம் திரும்புயுள்ளது. டெக் நிறுவனங்களின் வர்த்தகம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சிலிக்கான் வேலி தனது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இதுவரை மறைமுகமாக இருந்த ட்ரம்ப்க்கும் சிலிக்கான் வேலிக்குமான யுத்தம் தற்போது நேரடியாக மாறியுள்ளது. சிலிக்கான் வேலி கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...

கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online