Google Adwords Updates in Tamil | Learn Adwords in Tamil


  Google Adwords Updates in Tamil  | Learn Adwords in Tamil 



 தேடினா கிடைக்காதது எதுவுமே இல்லை


கூகுள் தேடினா கிடைக்காதது எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு அனைத்து தகவல்களும் கூகுளில் இருக்கும்
கூட்டம் இல்லா உலகம் கூடச் சாத்தியம், ஆனால், கூகுள் இல்லா உலகம் சாத்தியமில்லை. இதன் பயனாளர்களில் பலரை கவர்வதற்காக, பல விளம்பரங்கள் வேறு வேறு இணையதளங்களில் விளம்பரப்படுத்தப்படும். இப்படிப்பட்ட விளம்பரங்களில் மீதுதான் கூகுள் செக் வைத்திருக்கிறது.

கூகுள் தனது விளம்பரம் தொடர்பான கொள்கைகளை மாற்றி அமைத்துள்ளது. மேலும் தவறான விளம்பரங்கள் என்று 1.7 பில்லியன் விளம்பரங்களை 2016 ஆம் ஆண்டு மட்டும் தடை செய்துள்ளது.இது முந்தைய ஆண்டான 2015ம் ஆண்டைவிட இரு மடங்காகும். இந்த விளம்பரங்கள் நம்பத் தகாத, சட்டவிரோதமான அறிவிக்கைகள், சலுகைகள் மற்றும் தவறான வழிகாட்டல்கள் போன்றவற்றை கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கூகுள்.

சட்டத்திற்கு புறம்பானவை பெரும்பாலான விளம்பரங்கள் மிகவும் பொருத்தமற்ற அறிவிப்புகளைக் கொண்டிருந்தன. இவற்றில் சுகாதர விதிமீறல்களை கொண்டவை எனக் கருதப்பட்டது 67 மில்லியன் விளம்பரங்கள். கேம்ப்ளிங் எனப்படும் சூதாட்டம் தொடர்பான சட்டவிரோத விளம்பரங்கள் 17 மில்லியன் தடைசெய்யப்பட்டது. (பண்ணுங்க. பாஸ் பண்ணுங்க)

இது தொடர்பாகக் கூகுளின் உற்பத்தி பிரிவு மேலாண்மை இயக்குநர் ஸ்காட் ஸ்பென்சர் கூறுகையில், 'கூகுள் பெரும்பாலான இணையதள பயன்பாட்டாளர்களின் தேடுதளமாக உள்ளது. மேலும் மக்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் தேவையான தகவல்களை இலவசமாகவும் எளிமையான முறையிலும் தருவதில் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் தரப்படுபவை துல்லியமான, தரமான தகவல்கள்தான் என்று உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பயன்பட்டாளர்களுக்கு சில விளம்பரங்கள் தவறான தகவல்களை அளித்து மோசடி செய்கின்றன. அதன் காரணமாக "Bad ads" எனப்படும் மோசமான விளம்பரங்கள் நீக்கப்பட்டன’ எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ’இத்தகைய விளம்பரங்கள் பயனாளர்களின் சுயவிவரங்களை பெற்று தவறான வழியிலும் மென்பொருட்கள்மூலம் கணினிக்கு ஆபத்தையும் தரவல்லவை. பயனர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதாலும் இதனுடைய பேண்தகைமையை('Sustainability') தொடரவும் இவை தடை செய்யப்பட்டதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு, தனது பயனர்களைப் போலி விளம்பரங்களிலிருந்து பாதுகாக்க கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. சென்ற ஆண்டு ஜுலையில் கொண்டு வந்த கொள்கையின் படி pay day loan எனப்படும் அதிகளவிலான பணம் ப்ரீபெய்ட்டாகக் கட்டச் சொல்லும் விளம்பரங்களும் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இந்த ஆறு மாதங்களில் மட்டும் 5 மில்லியனிற்கும் அதிகமான pay day loan விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற தவறானவற்றை கண்டறியவும் நீக்கவும் தனது தொழில்நுட்பத்தை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாகச் சில விளம்பரங்கள் நம்மைக் கவர சலுகைகளைக் காட்டி இருக்கும் அதைக் கிளிக்கியவுடன் வேறொரு இணையதள முகவரிக்கு அழைத்துச்செல்லும். சில விளம்பரங்கள் நம்முடைய சிஸ்டத்துலயே வைரஸ் உள்ளதென்றும் அதை நீக்கக் கிளிக் செய்யவும் போன்ற விளம்பரங்கள் வரும் அதைக் கிளிக்கியவுடன் தானாகத் தீங்கு தரக் கூடிய மென்பொருட்கள் தரவிறக்கம் ஆகும். இதைப் போன்ற 112 மில்லியன் விளம்பரங்களைக் கண்டறிந்து நீக்கியுள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஆறு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
செல்ப் கிளிக்கிங் ஏட் எனப்படுபவை( Self Clicking Ads)   இணையத்தில் நுழையும்போது தானாகவே அந்த விளம்பரத்தினுள் செல்லும். இந்த வகை 23000 விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இதைப் போன்ற விளம்பரங்களைக் கண்டறியும் கூகுள் டிடெக்சன் சிஸ்டத்தையே ஏமாற்றி விளம்பரபடுத்தப்பட்ட 7 மில்லியன் போலி விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

டேப்ளாய்டு க்ளாக்கர்ஸ்
2016ம் வருடம் எப்பவும் இல்லாத அளவிற்கு புது டைப் விளம்பர மோசடியாளர்கள் அதிகமாகி விட்டார்கள். இவர்கள் அப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ள விசயங்களை அவுட்லைனாக வைத்துக்கொண்டு பயனர்களைக் கவர்வார்கள். உள்ளே சென்றதும் தனது ப்ராடக்டுகளை விற்பனை செய்வார்கள். இவங்க தான் டேப்ளாய்டு க்ளாக்கர்ஸ். ஒரு வாரத்தில் இவர்களின் இணையத்துல போய்ப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டியதாம்.இந்த மாதிரி 1300 விளம்பரங்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 இல் எடை இழப்பு மோசடி தொடர்பான உள்ளடக்கம் மற்றும் பொருட்கள் ஊக்குவித்த 47,000 தளங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 6000 தளங்கள் மற்றும் 6,000 கணக்குகள் போலியான பொருட்கள் விளம்பரம் செய்ய முயன்றதால் நீக்கப்பட்டனர்

Thanks and Written By Ananda Vikatan Tamil Magazine .

This Is Example and new Updates in Tamil

Google.co.in - Google AdWords™‎

  

கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online