இணையம் நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் தேவை / ZOHO In Tamil


 இணையம்  நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் தேவை / ZOHO In Tamil 

 ZOHO In Tamil 


ஸ்டார்ட்அப் உருவாக்கத்தின் பாலபாடம் சந்தையின் தேவையை சரியாக கணித்து, அதில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்ய வேண்டிய தொழில்நுட்பத்தை கண்டறிவது. அதை எந்த முன் அனுபவமும் தேவையின்றி எவரும் புரிந்து கொள்ளக்கூடிய மிக எளிமையான வடிவத்தில் தயாரித்து வழங்குவது மிக அவசியம். இதை மிகச் சரியாக செய்து வெற்றி மேல் வெற்றி பெற்ற ஒரு சென்னை ஸ்டார்ட்அப் தான் Zoho.

1996. இணையம் கொடிவிட்டு பரவ ஆரம்பித்த புதிது. நெட்வொர்க் மென்பொருட்களின் தேவை மிக அதிகமாக இருந்த காலம். அதில் பரவலாக பெரிய கம்பெனிகளே முயற்சித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது Ph.D பண்ணிக் கொண்டிருந்த ஸ்ரீதர்வேம்பு என்ற இளைஞர் இந்தியா திரும்பி சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் Adventnet (பின்னர் ZOHO பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என்ற அந்த ஸ்டார்ட்அப்பின் கிளையை துவங்குகிறார். நெட்வொர்க் உலகில் நிறைய இடைவெளிகள் இருந்த காலம் அது.
Protocol Adapter, Software Agent, Stimulation Toolkits போன்ற நுண் இணைய தொழில்நுட்பத்தின் தேவை அதிகம் இருந்தது. இவற்றை அலுவலக நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கணினிகளிலும் புகுத்திவிட்டால் ஓர் அட்மின் கணினியில் இருந்து எல்லாவற்றையும் கண்காணிக்க, வேண்டிய செயல்களையும் செய்ய முடியும். Original Equipement Manufacture என்று குறிப்பிடப்படும் பெரிய வகை தொழில்சாலைகளுக்கு இது இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய உதவி செய்தது. பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த மனிதசக்தியை இது வெகுவாக குறைத்தது.
இதை செய்துகாட்டிய இவர்களின் முதல் தயாரிப்பு WebNMS ஒரு வருடத்திலேயே ஹிட் . இந்த காலகட்டத்தில் பெரிய பெரிய நெட்வொர்க் சாதன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் ஜோஹோவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாங்கினார்கள். அதுதான் இவர்களின் முதல் வெற்றி. அந்த தொழில்நுட்பத்தை இன்னும் எளிமையாக்கி சிறிய, நடுத்தர கம்பெனிகள் முதல் பெரிய கம்பெனிகள் வரை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கினார்கள்.
அதற்கு முன்பு இந்த வகை தொழில்நுட்பங்கள் மிக கடினமாக இணைய கட்டளைகள் ஒவ்வொன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டிய, தேடுவதற்கு அரிதான வகையில் இருந்ததை இணையதள வடிவமைப்பில்(Web Interface) கொண்டுவந்து எளிமைப்படுத்தினார்கள்.
வெகுவிரைவில் இவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத நெட்வொர்க் கம்பெனிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாவற்றிலும் வியாபித்தார்கள். பிறகு அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பிற நெட்வொர்க் தயாரிப்புகளை கொண்டுவந்தார்கள்.
விஷயம் அதுமட்டும் அல்ல.
இவர்களை போலவே சில பல நெட்வொர்க் கம்பெனிகளும் உருவாகின. ஆனால் அவர்கள் தயாரிப்புகள் சந்தையில் பெரிதாக கவரவில்லை. காரணம் Usability.  பயனாளிகள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய பயன்திறன் வடிவமைப்பில் கவனம் செலுத்த தவறினார்கள். ஒரு பொருள் தொழில்நுட்பத்தில் எவ்வளவு மேம்பட்டு இருந்தாலும் பயனாளிகளுக்கு ஏற்றவிதத்தில், எளிதில் புரியும் விதத்தில் இல்லாவிட்டால் அது தோல்வி தான் காணும். இதை ZOHO சிறப்பாக புரிந்து செயல்பட்டார்கள்.
மேலும் நிறுவனத்திற்குள் நிலவிய கார்ப்பரேட் கலாசாரத்தை மிக மிக எளிமையாக்கினார். மேனேஜர்களுக்கு இயக்குனர்களுக்கு எவருக்கும் தனிஅறை கிடையாது. யாரையும் எளிதில் அணுகலாம். முதலாளிக்கு கூட தனி அலுவலக அறை, பெரிய வில்சேர், உதவியாளர் என்றெல்லாம் கிடையாது. தனி நபர் ஆடம்பரம் தான் கிடையாது என்றாலும் கொண்டாட்டங்களுக்கு குறை இருக்காது. மேலும் என்னென்ன வசதிகள் கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.

                        பொறுப்புக்களை கொடுப்பார்கள்.


வேலை கொடுப்பதற்கு பதில் பொறுப்புக்களை கொடுப்பார்கள். பொதுவான, தொழில்நுட்பம் சார்ந்த என எல்லாவிதமான கருத்துக்களை பகிர Internal Blog, Forum இருந்தது. ஸ்ரீதர் இதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடிக் கொண்டே இருந்தார். இன்று முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் எல்லாம் நாம் கருத்துவிவாதம் செய்வது போலவே வெளிப்படையாக ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளித்தது.

பொது நூலகங்கள், தொழில்நுட்ப நூலகங்கள், வீடியோ நூலகம், விளையாட்டுதளங்கள், உடற்பயிற்சி கூடம், ஓய்வு அறைகள் எல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் கொண்டுவந்து விட்டார்கள்.
இந்த கலாசாரம் என்ன செய்தது? வேலை செய்யும் பணியாளர்களை  பயமில்லாத, பதட்டமில்லாத, இணக்கமான, தெளிவான மனநிலையுடன் நிறைய வேலைகளை செய்ய தூண்டியது. புது புது ஐடியாக்களை ஊக்குவித்தார்கள். அது ஒன்றை பத்தாக்கி பல தயாரிப்புகளாக கிளை பரப்பியது.
மேற்சொன்ன எல்லா விசயங்களும் ஒரு ஸ்டார்ட்அப் மேலும் மேலும் வளரத் தேவையான அடிப்படை பாடங்கள். இதில் தெளிவு இருக்கும் எந்த நிறுவனமும் வெற்றி பெற தவறியதில்லை. இன்று WebNMS, ManageEngine, Zoho Clouds என்று மூன்று குடைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட மென்பொருள் தயாரிப்புகளுடன் உலகமெங்கும் கிளைபரப்பி 3000 ஊழியர்களுடன் வளர்ந்திருக்கிறது ZOHO.

ஒரு நல்ல நிறுவனம் என்றால் அதிலிருந்து புதிய விதைகள் தோன்றி விருட்சமாக வளர வேண்டும். ZOHOவில் பணியாற்றி இந்த பாலபாடங்களை கற்ற சிலர் சொந்தமாக Startup தொடங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

                          ஸ்டார்ட்-அப் பாடம்:

நவீன தொழில்நுட்பத்தை பற்றி தொடர்ந்து கவனித்துவாருங்கள். ஒரு புது தொழில்நுட்பம் பல புதிய யோசனைகளை கொடுக்கலாம். இரண்டு தொழில்துறைகளை இணைக்கும் பாலமாக இருக்கும். அந்த இடைவெளியை கண்டறியுங்கள். அதற்கு அந்த துறையில் நீங்கள் இஞ்சினியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முழுத் தொழில்நுட்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online